திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அந்தியூர்: விபத்தில் மனைவி பலி, கணவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஜாதகம் பார்ப்பதற்காக கணவருடன் சென்ற மனைவி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். கணவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஆகஸ்ட் 2020, 12:38 pm

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஜாதகம் பார்ப்பதற்காக கணவருடன் சென்ற மனைவி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். கணவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தியூர் அருகேயுள்ள குருவரெட்டியூர், அஞ்சலக வீதியை சேர்ந்தவர் சதாசிவம் (56). இவரது மனைவி ஆதிலட்சுமி (52). இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் பட்லூர் - பவானி சாலையில் ஒலகடம் வழியாக சென்று கொண்டிருந்தனர். குட்டைமேடு அருகே  சென்றபோது, அதிவேகமாக பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், பலத்த காயமடைந்த ஆதிலட்சுமி, கணவன் கண்ணெதிரிலேயே உயிரிழந்தார்.  சதாசிவம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.