தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புரெவி புயல்: கோடியக்கரை கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்து வடிந்தது; அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, வடிந்ததால் மீனவ மக்களிடையே வியாழக்கிழமை பரபரப்பு நிலவியது.

News image

கோடியக்கரை கடல் சீற்றத்தை பார்வையிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆட்சியர் பிரவீன் பி நாயர்.

Updated On :3 டிசம்பர் 2020, 12:13 pm

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, வடிந்ததால் மீனவ மக்களிடையே வியாழக்கிழமை பரபரப்பு நிலவியது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை ஏற்பட்டது.

Story image

புயல் இலங்கை வழியாக நகர்ந்து சென்ற போதிலும் இலங்கைக்கு அருகேயுள்ள வேதாரண்யம் பகுதியில் அதன் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில், கோடியக்கரையில் வியாழக்கிழமை காலையில் கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்து தாழ்வான இடங்களில் உள்புகுந்து, சற்று நேரத்தில் வடிந்தது. இதனால் மக்களிடையே பரபரப்பு நிலவியது.

Story image


இதையடுத்து, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகை ஆட்சியர் பிரவீன் பி.நாயர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்து, அச்சமடைய தேவையில்லை என மக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.