புரெவி புயல் பாதையில் நீலகிரி இல்லாததால் மழை பெய்தாலும் அதன் தாக்கம் அதிகம் இருக்காது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஏற்கனவே நிவர் புயலுக்காக ஏற்பாடு செய்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல் அளித்துள்ளார்.
குன்னூர் உபதலை ஊராட்சியில் உலக மாற்றுத் திறனாளிகள் நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைப்பெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கரோனா தோய்த் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என 10 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் , 15 பயனாளிகளுக்கு 1,27,681 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கிண்டர் டிரஸ்ட் சார்பில் தையல் பயிற்சி பெற்ற 15 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் நீலகிரி மாவட்டம் புயல் தாக்க பாதையில் இல்லை. இருப்பினும் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த நிவர் புயலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அதிக மழை பலத்த காற்று இருந்தால் இரண்டு நாள்களுக்கு பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


