எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு

சென்னையில் அம்பத்தூர், ஆலந்துர், சோளிங்கநல்லூர், எழும்பூர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 50 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

News image
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு
Updated On :4 டிசம்பர் 2020, 9:13 am

DIN

சென்னையில் அம்பத்தூர், ஆலந்துர், சோளிங்கநல்லூர், எழும்பூர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 50 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

வங்க கடலில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் சற்றே விலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே  நிலை கொண்டிருந்தது.

இது  மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் மற்றும் அதையெட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை அடுத்த சில நேரங்களில் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 399.60 மி.மீ. மழை பெய்துள்ளது. 

அதாவது, புரசைவாக்கத்தில் 26.80 மி.மீ. மழையும், பெரம்பூரில் 40.20 மி.மீ. மழையும் அம்பத்தூரில் 56 மி.மீ. மழையும் அயனாவரத்தில் 36 மி.மீ. மழையும் எழும்பூரில் 54.30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

அதுபோலவே, தண்டையார்பேட்டையில் 29.30 மி.மீ. மழையும் மாம்பலத்தில் 23.40 மி.மீ. மழையும் கிண்டியில் 12.40 மி.மீ. மழையும் மயிலாப்பூரில் 12.40 மி.மீ. மழையும் ஆலந்தூரில் 55.40 மி.மீ. மழையும் சோளிங்கநல்லூரில் 53.40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.