சீர்மிகு திட்டத்தின் கீழ், மதுரை மாநகரத்தில் ரூபாய் 974.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாட்டுத்தாவணி பகுதியில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் பழச்சந்தை, பெரியார் பேருந்து நிலையத்தை ரூபாய் 167 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், புராதானச் சின்னங்கள் மற்றும் தெரு விளக்குகளை ரூபாய் 73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், மீனாட்சி அம்மன் கோவில் அருகில் சுமார் ரூபாய் 42 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், மதுரை மாநகருக்கு அழகு சேர்க்கும் விதமாக அதிகமான பூங்காக்கள் என அமைத்துக் கொடுத்திருக்கிறோம். விளக்குத் தூண் மற்றும் பத்துதூண் பகுதிகளை புனரமைத்தல், திருமலை நாயக்கர் மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துதல், சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அமைத்தல், நான்கு மாசி வீதிகளில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் சிறப்புச் சாலை அமைத்தல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வைகை வடகரைப் பகுதிகளில் ரூபாய் 276 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை அமைத்தல், தமுக்கம் மைதானத்தில் சுமார் ரூபாய் 47.7 கோடி மதிப்பீட்டில் கலாச்சார மையம் கட்டுதல், பொதுப்பணித் துறை மூலம் சுமார் ரூபாய் 84 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் மற்றும் இரு கரையோரப் பகுதிகளில் தலா சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுதல், நான்கு வழிச்சாலை மற்றும் பூங்காக்கள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சுமார் ரூபாய் 303 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் இரு கரையோரப் பகுதிகளில் தலா 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டி, நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி நிதியின் கீழ், சுமார் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ரூபாய் 23.17 கோடி மதிப்பீட்டில் குருவிக்காரன் சாலைப் பகுதியில் பாலம் கட்டப்பட்டு வருகின்றது.