எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

புதிய கட்சி தொடங்கப்படவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2020, 7:09 am

DIN

புதிய கட்சி தொடங்கப்படவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 

மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். 

தொடர்ந்து, நேற்று பெங்களூருவில் தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார். இதன் தொடர்ச்சியாக இன்று  நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று பெங்களூருவுக்குச் சென்ற ரஜினி, அங்கிருந்து ஹைதராபாத் சென்று 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், ரஜினி திடீரென சென்னை திரும்பியதுடன் கட்சி தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

மேலும், கட்சி தொடர்பான போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடக்கூடாது என நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.