சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு எந்த நிதியில் இலவச உணவு வழங்கப்படுகிறது?
சென்னை மாநகரில் குடிசைப் பகுதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு அரசு பணத்தில் வழங்கப்படுகிறதா? என சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை மாநகரில் குடிசைப் பகுதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு அரசு பணத்தில் வழங்கப்படுகிறதா? என சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை சென்னை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட கழக செயலாளரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: சென்னையில் நிவர் மற்றும் புரெவி ஆகிய இரண்டு புயல்களால் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் சென்னை குடிசைப்பகுதி மக்களுக்கு 8 நாள்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும், இதில் ஒரு நபருக்கு மூன்று வேளை உணவுக்கு ஆகும் செலவு ரூ.150 என்றும், 8 நாட்களுக்கும் உணவுக்கான செலவு ரூ.1200 என்றும், ஆக 8 நாள்களுக்கு 26 லட்சம் பேருக்கு ஆகும் செலவு ரூ.312 கோடி என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 26 இலட்சம் பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது. முறையாக அரசு அலுவலர்களை வைத்து வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
10 கிலோ அரிசியை வைத்து, சமைத்த உணவை 1000 பேருக்கு வழங்கியுள்ளோம் என்று, அதிமுகவின் பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.கந்தன், விருகம்பாக்கத்தில் விருகை வி.என்.ரவி இன்னும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக கொடி கட்டிவைத்து, சோழிங்கநல்லூரில் பொதுமக்களுக்கு வழங்கியதாக உணவு வழங்கும் புகைப்படங்களையும் போட்டு முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆணையரிடம், இது மக்கள் பணம், அரசின் பணம் வீணடிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தொலைப்பேசி மூலம் புகார் தெரிவித்துள்ளோம். அதற்கு அவர், ‘நான் குறிப்பு அனுப்பி, நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று பதில் அளித்தார். ஆனால் நேற்று இரவும், காலையிலும் அதேப்போல் கட்சி நிர்வாகிகளே வைத்தே இரவு நேரங்களில் உணவு பொட்டலங்களை வழங்கிக்கொண்டுதான் உள்ளனர். புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இதன்மூலம் ரூ.312 கோடி மாநகராட்சி பணம் அபகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...