சென்னையில் கரோனா சிகிச்சையில் 3,242 பேர்
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 3,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 3,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தொடர்ந்து பல வாரங்களாக கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகவே நீடித்து வந்த நிலையில் தற்போது 1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2,18,856 ஆக உள்ளது. இவர்களில் 2,11,716 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,898 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78 சதவீதமாகும்.
இவர்களில் 3,242 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1% ஆகும். மேலும் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் 400-க்கும் குறைவானோரே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கரோனா பாதித்தவர்களில் 61.36 சதவீதம் பேர் ஆண்கள், 38.64 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
திருவிகநகர், அண்ணநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் மட்டுமே 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவொற்றியூர், மணலி, சோலிங்கநல்லூர் மண்டலங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...