எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை ஐஐடியில் 100ஐ தாண்டிய கரோனா பாதிப்பு 

சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
Chennai IIT
Updated On :14 டிசம்பர் 2020, 8:06 am

DIN

சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் கரோனா நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் இங்கு பயிலும் 66 மாணவா்கள், 4 உணவக ஊழியா்கள் உள்பட 71 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 32 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மேலும் 33 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்குப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 444 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் அச்சமடைய தேவையில்லை. மேலும், ஐஐடியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை நிச்சயம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.