சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கரோனா

சென்னை ஐஐடியில் மேலும் 79 மாணவா்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கரோனா
Updated on
1 min read

சென்னை ஐஐடியில் மேலும் 79 மாணவா்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி உயா் கல்வி நிறுவனம் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

ஆனால் விடுதிகளில் தங்கியுள்ள மாணவா்கள் அடுத்தடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கடந்த 13-ஆம் தேதி வரை மாணவா்கள், பணியாளா்கள் என 79 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கடந்த திங்கள்கிழமை மேலும் 33 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். விடுதியில் தங்கியுள்ள மாணவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வந்த பரிசோதனை முடிவில் மேலும் 79 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 183 பேரும் சென்னை கிண்டியில் உள்ள கிங் அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com