கோவையில் தலைவர்களுக்குத் தயாராகும் பிரசார வாகனங்கள்
2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பல்வேறு இடங்களில் வாகன வடிவமைப்புப் பணிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும் தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் வடிவமைப்பு செய்வதில் முதலிடம் பிடித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த "கோயாஸ்" என்ற தனியார் நிறுவனம் தேசியத் தலைவர்கள் முதல் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வரை அனைவருக்குமே தேர்தல் பிரசார வாகனம் தயார் செய்வதில் முன்னோடியாகத் திகழ்கிறது.
எதிர்வர இருக்கும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசார வாகனங்களை தயார்படுத்தும் பணியில் இந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இங்கு தயாராகும் வாகனங்கள் குறித்தும், சிறப்பம்சங்கள் குறித்தும் நிறுவனத்தின் உரிமையாளர் ரியாஸ் கூறியதாவது:
கோயாஸ் நிறுவனமானது எங்களின் தந்தை காலத்திலிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக கோவையில் இயங்கி வருகிறது. தமிழகத் தலைவர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் எங்கள் நிறுவனமானது பிரசார வாகனங்களையும் பாதுகாப்பு வாகனங்களையும் கடந்த 50 வருடங்களாக சிறந்த முறையில் தயாரித்து வடிவமைத்துக் கொடுக்கிறோம்.
இந்த வாகனத்தில் தலைவர்களின் இருக்கைகள் சுழலும் இருக்கை வசதியுடன் வடிவமைக்கின்றோம். இதனால் இருக்கையில் அமர்ந்து பிரசாரம் மேற்கொள்ளும் விதமாகவும், இருக்கையில் அமர்ந்தவாரே வாகனத்திற்குள் செல்லும் வசதியுடன் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கிறோம், அதனால் அதில் அமர்ந்து தலைவர்கள் சுலபமாக இறங்குவதற்கும், இருக்கையில் அமர்வதற்கும் ஏதுவாக இருக்கிறது.

மேலும் தொண்டர்களிடையே பேசுவதற்காக தலைவர்களுக்கு "ஹைட்ராலிக் லிப்டிங்" மற்றும் "மேனுவல் லிப்டிங்" வசதியுடன் வாகனத்தின் நடுவே மேடையில் நின்று பேசுவதற்கு இந்த இரண்டு விதமான நவீன தொழில் அமைப்புடன் செய்து கொடுக்கின்றோம்.
மேலும், பிரசாரத்தின் போது நீண்ட தூரம் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது தலைவர்கள் ஓய்வெடுக்க வசதியாக படுக்கை வசதி மற்றும் தலைவர்களுடன் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசக்கூடிய சோபா போன்ற அமைப்புடன் கூடிய இருக்கை வசதிகளை வடிவமைத்துத் தருகின்றோம்.

அதேபோன்று தலைவர்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் பொழுது தொண்டர்கள் பார்க்கும் விதமாக சிறப்பு ஒளி அமைப்புகளையும் பிரசார வாகனத்தில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும், பிரச்சாரத்தின் போது தலைவர்கள் பேசுவதை துல்லியமாக கேட்கக்கூடிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய (ஒலி) சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், தலைவர்களின் பாதுகாப்பிற்காக வரக்கூடிய பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் விதமாக வாகனத்தை சுற்றிலும் கைப்பிடி வசதிகளுடன் கூடிய படிக்கட்டுகள் அமைத்து கொடுக்கின்றோம். இதில் 15 பாதுகாவலர்கள் வரையிலும் தங்களது பாதுகாப்பு பணிகளில் ஈடுபடலாம். தற்பொழுது 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு தலைவர்களின் வாகனங்கள் தங்களது நிறுவனத்தில் தயார்படுத்தி வருகிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் இதன் பணிகள் முழுமையடைந்து சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...