டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் 10% இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது.

News image
புதுச்சேரி மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
Updated On :17 டிசம்பர் 2020, 10:25 am

DIN


சென்னை: புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,  புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி  அமைச்சரவை முடிவு செய்து  துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. 

அமைச்சரவையின் முடிவை, துணைநிலை ஆளுநர்  மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். கடந்த 2016 -2017 ஆம் ஆண்டிலிருந்து அரசு பள்ளியில் படித்த 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் தனியார் பள்ளியில் படித்த மாணர்வர்கள் 243 பேர் முதல் 402 பேர் வரை  மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை புதுச்சேரியில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க  வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி, 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையின் முடிவு குறித்து சில விளக்கங்களைக் கேட்டு புதுச்சேரி அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக  துணை நிலை ஆளுநர் நேற்று வெளியிட்ட அறிக்கையை  சுட்டிக்காட்டினார்.

மேலும், மனு தொடர்பாக வரும் டிசம்பர் 21 ஆம் தேதிக்குள்  மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.