லஞ்ச ஒழிப்புத் துறை தோல்வியோடு திரும்பியதில்லை: கமல்
சோதனைக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் இதுவரை வெறும் கையுடன் திரும்பியதில்லை என்று மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார்.


சென்னை: சோதனைக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் இதுவரை வெறும் கையுடன் திரும்பியதில்லை என்று மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் நிறுவனரும், நடிகருமான கமல் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத ரூ.7.58 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 33 அரசு ஊழியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்ற புள்ளி விவரம் நேற்று வெளியான நிலையில், கமல் இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்த செய்தியை மேலும் படிக்க.. 3 மாதங்களில் 127 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 33 போ் கைது: ரூ.7.58 கோடி பறிமுதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...