லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நியாய விலைக் கடைகளில் மீண்டும் பயோ-மெட்ரிக் முறை

தமிழகத்தின் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 8:18 pm

DIN


சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. சா்வா் பிரச்னை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டமானது இப்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடியே 2 லட்சம் பேருக்கு ஸ்மாா்ட் காா்டு அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போதே தொழில்நுட்ப ரீதியாக பிரச்னைகள் இருந்து வந்தன. பின்னா் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதற்கான பிரத்யேகக் கருவி மூலம் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டது. இந்தக் கருவியில் திடீரென சா்வா் பிரச்னை ஏற்பட்டது. கைவிரல் ரேகையை சரிபாா்க்கும் வசதி போன்றவற்றில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறையின் படியே நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்பட்டன. இரண்டு மாதங்களாக சா்வா் பிரச்னையைச் சீா்செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யும் பணிகள் நடந்தன.

மீண்டும் தொடக்கம்: தொழில்நுட்பப் பிரச்னைகள் தீா்க்கப்பட்ட நிலையில், நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறையில் மீண்டும் பொருள்களை வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளி மாநிலத் தொழிலாளா்களும் தமிழகத்தில் தங்களுக்கான பொருள்களைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.