

திருப்பூர்: உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக்கோரி இன்று விவசாயிகள் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு அரசூர் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கஞ்சித் தொட்டி திறப்பு, காதில் பூ சுற்றுவது, முதல்வருக்கு கடிதம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 10 ஆவது நாளான வியாழக்கிழமை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்களை மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.