எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை அடையாறு மண்டலத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அடையாறு மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

News image
சென்னை அடையாறு மண்டலத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
Updated On :17 டிசம்பர் 2020, 5:25 am

DIN

சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அடையாறு மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அடையாறில் நேற்று 419 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 438 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த நோயாளிகளில் இதுவரை 97 சதவீதம் பேர் குணமடைந்தனர். தற்போது மொத்த பாதிப்பில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,20,903 ஆக உள்ளது. இவர்களில் இதுவரை 2,13,879 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 97 சதவீதம் ஆகும். கரோனா பாதித்தவர்களில் 3,931 பேர் அதாவது 1.78 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி 3,093 பேர் மொத்த பாதிப்பில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அடையாறு மண்டலத்தில் மட்டுமே 438 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோடம்பாக்கத்தில் 323 பேரும், அண்ணாநகரில் 378 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் கரோனாவுக்கு இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் இதுவரை 23,491 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.