சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரஜினி, கமல் கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது: சீமான் கருத்து

ரஜினி, கமல் கூட்டணி வைத்தாலும் தேர்தல் முடிவில் மாற்றம்  வராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

News image
ரஜினி, கமல் கூட்டணி வைத்தாலும் தேர்தல் முடிவில் மாற்றம் வராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:22 pm

DIN

தஞ்சாவூர்: ரஜினி, கமல் கூட்டணி வைத்தாலும் தேர்தல் முடிவில் மாற்றம்  வராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தஞ்சையில் வியாழன் அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது.

அசாதுதீன் ஒவைசி எனக்கு அறிமுகமானவர். ஆனால் அவரது கட்சி உட்பட எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை.

நாங்கள் வேட்பாளர் தேர்விலேயே இறங்கி விட்டோம் என்பதால் இதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை.  

ரஜினி, கமல் ஆகிய இருவரும் கூட்டணி வைத்தாலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் வராது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.