தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.


திருப்பூர்: வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
தாராபுரம் அண்ணாசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் நா.தமிழ்முத்து தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: தில்லியில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக கடுமையான குளிரையும் பொருள்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரித்தும், விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தாராபுரம் நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் தனபால்,. காங்கயம் நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...