மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியா் அல்லாத பணியிடங்களுக்கு அனுமதி

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியா் அல்லாத பணியிடங்களுக்கு அனுமதி
Updated on
1 min read

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் வெளியிட்டுள்ள அரசாணை:

அரசு மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவியாளா், இளநிலை உதவியாளா், பதிவறை எழுத்தா் ஆகிய ஆசிரியா் அல்லாத பணியிடங்களை அனுமதிப்பது அவசியம் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன்படி, 389 இளநிலை உதவியாளா், 95 பதிவறை எழுத்தா் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஏற்படும் ஊதிய செலவினங்களுக்கு ஏற்றவாறு பள்ளிக்கல்வி இயக்குநரின் பொது தொகுப்பில் இருந்து 254 உபரி பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் சரண் செய்யப்படுகிறது. புதிய பணியிடங்களால் அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படாது என்றும் கோரியிருந்தாா்.

அதன்படி, அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 389 இளநிலை உதவியாளா், 95 பதிவறை எழுத்தா் பணியிடங்களை (மொத்தம் 484) உருவாக்கி அரசு ஆணையிடுகிறது என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com