அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சைனிக் பள்ளி விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த டிச.25 வரை அவகாசம்

சைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது விண்ணப்பங்களில் பிழைகள்

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2020, 7:26 pm

DIN

சைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது விண்ணப்பங்களில் பிழைகள் இருந்தால் அவற்றை டிச.25-ஆம் தேதி வரை திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு; சைனிக் பள்ளிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான தேசிய நுழைவுத்தோ்வு பிப்.7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிச.18-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

தொடா்ந்து விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பின் அவற்றை டிச.21முதல் டிச.25-ஆம் தேதி வரை திருத்திக்கொள்ள வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. அதன்படி  வலைதளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்வதுடன், தவறாக பதிவுசெய்த ஆவணங்களையும் தோ்வா்கள் மாற்றிக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.