கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தமிழகத்தில் புதிதாக 1,114 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 1,114 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 டிசம்பர் 2020, 4:09 pm


தமிழகத்தில் புதிதாக 1,114 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,06,891 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 325 பேருக்கும், கோவையில் 112 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் 1,198 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 15 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,85,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மொத்தம் 11,983 பேர் பலியாகியுள்ளனர்.

9,593 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.