பளு தூக்கும் போட்டி: சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் வென்று வீரர் சாதனை
திருவள்ளூரைச் சேர்ந்த வீரர் சர்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் 2-ஆவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார்.


திருவள்ளூர்: திருவள்ளூரைச் சேர்ந்த வீரர் சர்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் 2-ஆவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார்.
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிபதி-பரிமளா தம்பதியின் மகன் ஹபினேஷ்(19). சர்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டி மகராஷ்டிரம் மாநிலம் இந்தூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் நவ.4 முதல் 11-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 25 நாடுகளிலிருந்து பளுதூக்கும் வீரர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், தமிழகத்திலிருந்து 26 பேர் கலந்து கொண்டனர். இதில் 75 கிலோ எடைப் பிரிவில் மட்டும் 25 பங்கேற்றனர். இப்பிரிவில் ஹபினேஷ் பளு தூக்குதல், ஸ்பென்ச்பிரஸ், கீழே இடுப்பு வரையில் தூக்குதல் ஆகிய போட்டிகளில் சர்வதேச அளவில் 2-ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் திருவள்ளூர் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இரண்டாமிடம் பெற்ற வீரரை தமிழ்நாடு பளு தூக்கும் சங்கத்தின் தலைவர் ஜெயபாலன் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...