சங்ககிரி மக்கள் மன்றத்தின் சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

சேலம், சங்ககிரி மக்கள் மன்றத்தின் சார்பில் திங்கள்கிழமை சங்ககிரி நகர் முழுவதும் விநியோகிப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. 
சங்ககிரி மக்கள் மன்றத்தின் சார்பில் சங்ககிரி நகர் பகுதியில் திங்கள்கிழமை பொதுமக்களிடத்தில் விநியோகம் செய்யப்பட்ட துண்டுப் பிரசுரம். 
சங்ககிரி மக்கள் மன்றத்தின் சார்பில் சங்ககிரி நகர் பகுதியில் திங்கள்கிழமை பொதுமக்களிடத்தில் விநியோகம் செய்யப்பட்ட துண்டுப் பிரசுரம். 
Updated on
1 min read

சேலம் மாவட்டம், சங்ககிரி மக்கள் மன்றத்தின் சார்பில் சங்ககிரியை லஞ்சம், ஊழல் அற்ற ஊராக மாற்றுவோம் எனக் குறிப்பிட்டு திங்கள்கிழமை சங்ககிரி நகர் முழுவதும் விநியோகிப்பட்ட துண்டுப் பிரசுரங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சங்ககிரி மக்கள் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் என்.எஸ். குழந்தைவேலு சங்ககிரியை லஞ்சம், ஊழல் அற்ற ஊராக மாற்றுவோம் என்று தலைப்பிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அலுவலர், அதிகாரிகள் கடமையைச் செய்வதற்கு லஞ்சம் கோட்டால் முழுத்தகவல்களுடன் அவரது கைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு  சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள், வணிக நிறுவனங்களில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சங்ககிரி பகுதிகளில் வழங்கப்பட்ட இத்துண்டுப் பிரசுரங்களால் பொதுமக்களிடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளன. இது குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com