தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.2,500: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை: தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் கடந்த சனிக்கிழமையன்று சிறு மருத்துவமனையைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிக்கலாமே.. பொங்கல் பரிசு: ரூ.1000-லிருந்து ரூ.2,500-ஆக உயா்ந்தது
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2500 வழங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...