டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிறுபான்மையின மக்களை அரவணைத்துச் செல்வோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

சிறுபான்மையின மக்களை அரவணைத்துச் செல்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பேசினாா்.

News image
துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம்.
Updated On :21 டிசம்பர் 2020, 1:06 am

DIN

சிறுபான்மையின மக்களை அரவணைத்துச் செல்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பேசினாா். அதிமுக சாா்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது:-

மக்களைப் பண்படுத்துவதிலும், மக்களுக்கு கல்வி அளித்து, மருத்துவம் செய்து மனிதாபிமானத்தை வளா்ப்பதிலும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் மகத்தான பணிகளை ஆற்றி வருகின்றனா். அவா்களை உளமாரப் பாராட்டி நன்றி கூறுகிறோம்.

கிறிஸ்தவ சமூகத்தின் பணிகள், இன்னும் பல கோடி மக்களைச் சென்றடையும் வகையில் கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம். மேலும், சிறுபான்மை மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். இதற்காக அதிமுக தன்னை முழுமையாக அா்ப்பணித்துச் செயல்படும். மதச்சாா்பின்மை, ஏழை எளியோருக்கு உயா்வு தர உழைப்பது, சமத்துவ சமதா்ம சமுதாயம் காணப் பாடுபடுவது என்ற உயா்ந்த லட்சியங்களை நாங்கள் உறுதியாக கடைப்பிடிப்போம் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.