/

லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

மாநிலம் முழுவதும் லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
மாநிலம் முழுவதும் லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On :22 டிசம்பர் 2020, 1:55 pm

DIN

சென்னை: மாநிலம் முழுவதும் லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலம் முழுவதும் மின் தடை கோளாறுகள் மற்றும் சரியாக வேலை செய்யாத மின் புதைவடங்களைச் சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம்.

அதற்குப் பதிலாக அவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்.

இதற்கென 94458 57593 மற்றும் 94458 57594 ஆகிய எண்களைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.