திருச்சியில் விவசாய சங்கங்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
திருச்சி சிந்தாமணி பகுதியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இன்று நடைபெற்று வருகிறது.


திருச்சி: திருச்சி சிந்தாமணி பகுதியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், காவிரி தனபாலன் தலைமையில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், காவிரி பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னதாக அனுமதி வழங்கிய காவல்துறை பின்னர் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய மறுத்தது. இதனால் விவசாயிகளுக்கு காவல்துறையினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...