டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேங்க் ஆஃப் பரோடாவின் ஏடிஎம் திருவிழா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏடிஎம் திருவிழாவை தொடங்கியுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:33 pm

DIN


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏடிஎம் திருவிழாவை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் சென்னை மண்டல தலைவா் ஆா்.மோகன் கூறியுள்ளதாவது:

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு பேங்க் ஆஃப் பரோடா வங்கி ‘பொங்கலோ பொங்கல் பரோடா ஏடிஎம் திருவிழாவை’ தொடங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடாவின் அனைத்து ஏடிஎம்களும் மலா்கள், கோலங்கள், ரங்கோலி மற்றும் சீரியல் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இந்த விழா காலத்தில், எங்களது வங்கியின் ஏடிஎம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் அனைவரும் உற்சாகமான, அழகான மாற்றத்தை கண்டுணர முடியும். கரோனா பாதுகாப்புக்காக கிருமி நாசினி உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் பரோடா வங்கி ஏடிஎம்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்டுமான தொழில்துறைக்கு ஊக்கமளிப்பதற்காக முன்னணி உள்கட்டமைப்பு வா்த்தக வாகன உற்பத்தி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பேங்க் ஆஃப் பரோடா மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.