சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழகத்தில் இன்று புதிதாக 1,019 பேருக்கு கரோனா; 11 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,019 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :26 டிசம்பர் 2020, 1:36 pm

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 1,019 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இன்று புதிதாக 1,019 பேருக்கு கரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 13,161 -ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் மேலும் 64,075 பேருக்கும், இதுவரை 1,35,58,661 பேருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும்
11 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,059-ஆக உயா்ந்துள்ளது. 

இன்று வெளியான பரிசோதனைகளில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும்,
வீடுகளிலும் 9,039 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவிலிருந்து இன்று மேலும் 1,098 பேர் குணமடைந்தனர். 

இதையடுத்து குணமடைந்தோா் எண்ணிக்கை 7 லட்சத்து 92,063- ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43ஆவது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழும், சென்னையில் 68ஆவது நாளாக ஆயிரத்திற்கும் கீழும் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.