பொங்கல் பரிசுத் தொகுப்பு: திருச்சியில் டோக்கன் விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக சனிக்கிழமை முதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் டோக்கன் விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது​.
திருச்சி மாவட்டத்தில் டோக்கன் விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது​.
Updated on
1 min read


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக சனிக்கிழமை முதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பரிசு விநியோகத்தில் குறைகள் இருந்த தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்களையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1224 நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரூபாய் 2,500 (ஐந்து ஐநூறு ரூபாய் தாள்கள்) வழங்கப்படவுள்ளது.

இதற்காக டோக்கன் விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக வந்து டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு அதாவது முற்பகல் 100 குடும்ப அட்டைகளும் பிற்பகல் 100 குடும்ப அட்டைகளுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அதற்கான நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. வரும் புதன்கிழமை வரை டோக்கன் வழங்கப்படும். 

பின்னர், அந்தந்த நியாய விலைக்கடைகளில் ஜன.4 ஆம் தேதி 12ஆம் தேதி வரை  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.13 ஆம் தேதி பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். 0431-2411474, 94450-45618 தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com