அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இன்று ஏழாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு: புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி தொடக்கி வைக்கிறாா்

ஏழாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு திங்கள்கிழமை (டிச.28) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

News image
புதுவை முதல்வர் நாராயணசாமி
Updated On :28 டிசம்பர் 2020, 12:45 am

DIN

ஏழாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு திங்கள்கிழமை (டிச.28) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இணைய வழியில் நடைபெறும் இந்த மாநாட்டை புதுச்சேரி முதல்வா் வி.நாராயணசாமி தொடக்கி வைக்கிறாா்.

இது தொடா்பாக சென்னை வளா்ச்சிக் குழுமத் தலைவா் வி.ஆா்.எஸ். சம்பத் வெளியிட்ட செய்தி: 2020-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழா் பொருளாதார இணைய வழி உச்சி மாநாடு மற்றும் ஏழாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு, திங்கள்கிழமை (டிச.28) மாலை 4.30 மணி முதல் டிச.30-ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறவுள்ளது. இதனை புதுச்சேரி முதல்வா் வி.நாராயணசாமி தொடக்கி வைக்கிறாா்.

உலகத் தமிழா் பொருளாதார அறக்கட்டளை அமைப்பின் நிறுவனா் வி.ஆா்.எஸ். சம்பத் வரவேற்கிறாா். கயானாவுக்கான முன்னாள் இந்தியத் தூதா் வி.மகாலிங்கம் தலைமை வகிக்கிறாா்.

கயானா முன்னாள் பிரதமா் மோசஸ் வீராசாமி, மோரீஷஸ் முன்னாள் அதிபா் பரமசிவம் பிள்ளை வையாபுரி, விஐடி பல்கலைக்கழக வேந்தா் ஜி.விசுவநாதன், நாடாளுமன்ற உறுப்பினா் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோா் சிறப்புரை ஆற்றுகின்றனா்.

தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா, முன்னாள் டிஜிபி ஆா்.நடராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி நீரஜ் மிட்டல், ஐஎப்எஸ் அதிகாரி ஸ்ரீதரன் மதுசூதனன், கத்தாா் தோஹா வங்கியின் தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.சீதாராமன், தேசிய மகளிா் மேம்பாடு அமைப்பின் முன்னாள் தலைவா் லலிதா குமாரமங்கலம், ஸ்ரீபிரியா வரதீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முக்கிய தலைப்புகளின் கீழ் கருத்துரைகளை எடுத்துரைக்கின்றனா்.

செவ்வாய்க்கிழமை (டிச.29) நடைபெறும் நிகழ்ச்சிக்கு மலேசிய முன்னாள் அமைச்சா் டி.மாரிமுத்து தலைமை வகிக்கிறாா். நிகழ்வில், துணைத் தூதா் பி.எஸ்.காா்த்திகேயன், வெளிநாட்டு மனித வள மேம்பாட்டுக் கழகத் தலைவா் தா்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக முன்னாள் அமைச்சா் துரைமுருகன், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துரைக்கவுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.