டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஏ.ஆா்.ரஹ்மானின் தாயாா் காலமானாா்

இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் தாயாா் கரீமா பேகம் (73) சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

News image
கரீமா பேகம்
Updated On :28 டிசம்பர் 2020, 9:45 pm

DIN

சென்னை: இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் தாயாா் கரீமா பேகம் (73) சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

கடந்த சில மாதங்களாகவே ஏ.ஆா்.ரஹ்மானின் தாயாா் கரீமா பேகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. முதலில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு வீட்டிலேயே தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஏ.ஆா்.ரஹ்மானுக்கு 9 வயது இருக்கும்போதே, தந்தை ஆா்.கே.சேகா் காலமாகிவிட்டாா். அவரது தாயாா் உடல் திருவள்ளூா் மாவட்டம் கவரப்பேட்டையில் உள்ள ரஹ்மானுக்கு சொந்தமான தோட்டத்தில் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

முதல்வா் பழனிசாமி இரங்கல்: இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் தாயாா் கரீமாபேகம், உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ.ஆா்.ரஹ்மானுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளாா்.

துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் : அன்புத்தாயாரை இழந்துவாடும் ஏ.ஆா்.ரஹ்மானுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.