டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாமக்கல் மாவட்ட எல்லையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
நாமக்கல் மாவட்ட எல்லையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
Updated On :29 டிசம்பர் 2020, 4:51 am

DIN

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, மாவட்ட எல்லையான ராசிபுரம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு பாதையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக மின்சார, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா,  முன்னாள் எம்பி., பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். 
ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் தோரணம் கட்டி அதிமுக கொடிகளையும் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட் அவுட்களையும் அமைத்திருந்தனர். 

அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாலை செலுத்திய முதல்வர், கட்சியினர் மத்தியில் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.