டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

'வெற்றி நடைபோடும் தமிழகம்' தேர்தல் பரப்புரை: நாமக்கல்லில் தொடங்கினார் முதல்வர் ‌பழனிசாமி 

"வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரையை தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.

News image
'வெற்றி நடைபோடும் தமிழகம்' தேர்தல் பரப்புரை: நாமக்கல்லில் தொடங்கினார் முதல்வர் ‌பழனிசாமி
Updated On :29 டிசம்பர் 2020, 5:21 am

DIN

நாமக்கல்: "வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரையை தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.

பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்த பின் அங்குள்ள திருமண மண்டபத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். 

Story image

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: அதிக அளவில் நன்மைகளை வழங்கிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. வசூல் செய்வதற்காகவே சில கட்சிகள் உள்ளன. அது எந்த கட்சி என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாலையோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகளை அதிமுக அரசு செய்து வருகிறது. அதிக அளவில் கடன் வழங்கியது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி. அதில் தேவையான கடன்களைப் பெற்று மக்கள் பயன் பெறலாம். நாமக்கல் மாவட்டம் அதிமுக ஆட்சியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது என்றார். 

முன்னதாக பொதுமக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.