இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கான விருது, விருதுத் தொகை அதிகரிப்பு: ஆணை வெளியீடு

கலைஞர்களைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் விருதுகளும், விருதுத் தொகையும் உயர்த்தப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கான விருது, விருதுத் தொகை அதிகரிப்பு: ஆணை வெளியீடு
Updated On :31 டிசம்பர் 2020, 12:39 pm

DIN


தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் விருதுகளும், விருதுத் தொகையும் உயர்த்தப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களைப் பாராட்டும் வகையில் தமிழக அரசின் கலைப்பாண்பாட்டுத் துறையால், ஆண்டுதோறும் மரபுவழி பிரிவில் ஒரு கலைஞருக்கும், நவீனபாணி பிரிவில் ஒரு கலைஞருக்கும், கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு, ஒரு கலைஞருக்கு ரூ.50,000 வீதம் பணமுடிப்பும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24.03.2020 அன்று கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது  அமைச்சர், தமிழ் ஆட்சிமொழி, மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அவர்களால் தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைச்செம்மல் விருது தொகையினை ரூ.50,000/-த்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் மேலும் விருதாளர்களின் எண்ணிக்கை 2-லிருந்து 6 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவ்வாறே ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைசெம்மல் விருது தொகையினை ரூ.50,000/-த்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கிடவும் மேலும் விருதாளர்களின் எண்ணிக்கை 2-லிருந்து (மரபுவழி-1, நவீனபாணி-1) மரபுவழிப்பிரிவு மற்றும் நவீன பாணிப் பிரிவுக்கென தலா 3 என விருதாளர்களின் எண்ணிக்கையினை 6 ஆக உயர்த்தியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.