தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பரங்கிப்பேட்டையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தில்லியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 8:30 am

தில்லியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மதீனா நகரைச் சேர்ந்தவர் சுல்தான் மகன் அப்துல் சமது(27). இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். தீவிரவாத நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாக கருதி இவரை போலீசார் தேடி வந்த நிலையில், கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவருடன் அப்துல் சமது செல்போனில் பேசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கடந்த மாதம் பரங்கிப்பேட்டைக்கு வந்து அப்துல் சமது குறித்து விசாரணை நடத்திச் சென்றனர்.

அப்போது அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரங்கிப்பேட்டை முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அப்துல் சமது புதுதில்லியில் கைது செய்யப்பட்டார்.

Story image

இந்நிலையில் சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை பரங்கிப்பேட்டைக்கு வந்தனர். பின்னர் மதினா நகரில் உள்ள அப்துல் சமது வீட்டிற்குச் சென்றனர். அங்கு சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அப்துல் சமதுவின் வீட்டில் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், அப்துல் சமதுவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. பரங்கிப்பேட்டையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.