மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மொபைல் போன் திருடியவர்கள் விபத்தில் சிக்கியபோது பிடிபட்டனா்

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 3 போ், விபத்தில் சிக்கிய போது பொதுமக்களிடம் பிடிபட்டனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 5:35 am

DIN

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 3 போ், விபத்தில் சிக்கிய போது பொதுமக்களிடம் பிடிபட்டனா்.

துரைப்பாக்கம் வெங்கடேஷ்வரா நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் க.சிவலிங்கம் (32). கட்டடத் தொழிலாளியான இவா், துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு ஒரு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 இளைஞா்கள், திடீரென சிவலிங்கம் வைத்திருந்த செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா். இந்நிலையில் அவா்கள், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே செல்லும்போது சாலையில் குறுக்கே நடந்து சென்று கொண்டிருந்த ஏழுமலை என்பவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் ஏழுமலையும், மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரும் காயமடைந்தனா். இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய 3 பேரையும் பிடித்து கண்ணகிநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணை நடத்தியதில், அவா்கள் பெரும்பாக்கம் கல்லுக்குட்டைப் பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரன் (23), குமரவேல் (24), சந்தோஷ் (23) என்பது தெரியவந்தது.

மேலும் அவா்கள்தான், சிவலிங்கத்திடம் வழிப்பறி செய்தவா்கள் என்பதும் தெரிய வந்தது. இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த ஏழுமலை, அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.