சாத்தூர் அருகே காவலரின் இரு சக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது காவலர் இரு சக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது காவலர் இரு சக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் இருவர் காயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண் கற்பகலட்சுமி (28) என தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்குக் காரணமான ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கற்பக லட்சுமியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...