ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தை அடுத்து, ஈரோடு மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஊடுருவி தற்போது தமிழகத்தில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முதன்முதலில் கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி ஒருநாள் முழு ஊரடங்கு கடைபிடிக்க ப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தது எனினும் வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை.
இதையடுத்து வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் 206 டாஸ்மாக் கடைகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கவில்லை இதேபோல் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட், சின்ன மார்க்கெட், உழவர் சந்தை போன்றவை மூடப்பட்டு இருந்தது.
ஹோட்டல்கள் இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்தகம் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. மாவட்டம் முழுவதும் அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டன.
பொது ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். பொது ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் எச்சரித்து இருந்தார்.
காலை முதலே முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க் பகுதி, சூரம்பட்டி நால்ரோடு, காளைமாடு சிலை, ஈரோடு பஸ் நிலையம், சுவஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம், ஆர்.கே.வி. ரோடு, கடை வீதிகள், ஈஸ்வரன் கோயில் வீதி போன்றவற்றில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஊரடங்கின்போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆங்காங்கே முக்கியமான பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் சுற்றிய சிலரின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். குறிப்பாக மாவட்ட எல்லைப் பகுதியான கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி, பண்ணாரி சோதனைச்சாவடி, தாளவாடி சோதனை சாவடி நொய்யல் ஆற்று சோதனை சாவடி அம்மாபேட்டை பவானி போன்ற சோதனை சாவடிகளில் போலீஸார் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே உள்ளே தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். பிற வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதைப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


