கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முழு பொதுமுடக்கம்: தேனியில் வெறிச்சோடிய சாலைகள்

தேனி மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

News image
தேனியில் வெறிச்சோடிய சாலைகள்
Updated On :5 ஜூலை 2020, 9:42 am

DIN

தேனி மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி, பழனிசெட்டிபட்டி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அரசு உத்தரவின்படி மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

நகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகம் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாததால் விவசாயப் பணிகளும் முடங்கியுள்ளது. பொதுமக்கள் தாமாக முன்வந்து முழு பொது முடக்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் என்றும் காவல்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.