மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பூர் வெள்ளக்கோவிலில் கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற செவிலியர் பலி

திருப்பூர் வெள்ளக்கோவிலில் கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற செவிலியர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜூலை 2020, 9:45 am

DIN

திருப்பூர் வெள்ளக்கோவிலில் கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற செவிலியர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காங்கயம் சாலை கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்பவருடைய மனைவி வளர்மதி (54). இவர் 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காங்கயத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வந்தார்.

இவர் சனிக்கிழமை இரவு வேலை முடிந்து ஸ்கூட்டரில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் முன்புறமுள்ள இரட்டைக்கிணறு அங்காளம்மன் கோயில் அருகில் பின்னால் வந்த கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.