எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்

சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :9 ஜூலை 2020, 1:34 pm

DIN

சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், 31.7.2020 வரை ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில்,  "நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி செலுத்த வேண்டும்" என்று சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை. வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட  அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள்.  தங்கள் வாழ்க்கையை "இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டுமோ" என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் "சொத்து வரி செலுத்துங்கள்" என்று  எச்சரிக்கை விடுவது மனித நேயமற்றது.  ஊழல்களுக்கு - குறிப்பாக கரோனா கால ஊழலுக்கு "புகலிடமாக"த் திகழும்  சென்னை மாநகராட்சி- "கமிஷன் வசூல்" செய்வதற்கான டெண்டர்களை ரத்து செய்து நிதி நிலைமையைச் சரி செய்யலாம். ஆனால் அது போன்ற டெண்டர்களை அனுமதித்துக் கொண்டே- "வருவாய்" என்ற காரணம் காட்டி சொத்து வரியை உடனே செலுத்துங்கள் என்று சென்னை மாநகராட்சி கெடுபிடி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவே சென்னை மாநகராட்சியின் "சொத்து வரி வசூல்" அறிவிப்பைத் திரும்பப் பெற்று- இந்த வரி வசூலைக் குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதத்திற்காவது தள்ளி வைக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.