தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை ரூ.18.13 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை ரூ. 18.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை ரூ. 18.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,60,110 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 7,83,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், 6,37,469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.18.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...