பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஊரடங்கு மீறல்: இதுவரை 6,38,859 வாகனங்கள் பறிமுதல்; ரூ.18.22 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை 6,38,859 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 ஜூலை 2020, 7:53 am

DIN

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை 6,38,859 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

எனினும், அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு, வாகனங்கள் பறிமுதல், அபராதம் விதிப்பது என காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,64,168 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 7,87,242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 6,38,859 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.18.22 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.