கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் ட்வீட்

கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூலை 2020, 9:42 am

DIN

கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகா் கோயில், கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே உள்ள விநாயகா் கோயில், கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் செல்வ விநாயகா் கோயில்களில் மா்ம நபா்கள் டயா்களைக் கொளுத்தி வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.