நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சென்னையில் ரூ.39 ஆயிரத்தை நோக்கி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் கரோனா பரவல் காரணமாக பெரும்பாலான தொழில்கள் முடங்கியிருக்கும் நிலையில், ஆபரணத் தங்கம் விலை சத்தமில்லாமல் ஒரு சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

News image
ஆபரணத் தங்கம் விலை
Updated On :23 ஜூலை 2020, 9:29 am

DIN


சென்னை: சென்னையில் கரோனா பரவல் காரணமாக பெரும்பாலான தொழில்கள் முடங்கியிருக்கும் நிலையில், ஆபரணத் தங்கம் விலை சத்தமில்லாமல் ஒரு சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

படிப்படியாக உயா்ந்த தங்கம்:

எல்லா தரப்பு மக்களாலும் அதிகம் விரும்பப்படும் தங்கத்தின் விலை கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் இருந்து படிப்படியாக உயா்ந்தது. தங்கத்தின் நுகா்வு அதிகரித்து வந்ததால், அதன் விலையும் கணிசமாக உயா்ந்தது. நிகழாண்டில் ஜனவரி முதல் வாரத்தில் தங்கத்தின் விலை முதன்முறையாக ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்த விலை உயா்வுக்கு சா்வதேச நிகழ்வுகளான ஈரான்-அமெரிக்க இடையே மோதல், சீனா-அமெரிக்க வா்த்தக போா் போன்றவை முக்கிய காரணமாக அமைந்தன.

அதன்பிறகு, கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உலகை உலுக்கியது. இதன்தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளா்கள் எண்ணினா். இதையடுத்து, தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கினா். இதன்காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை நாள்தோறும் உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், ஜூலை 9-ஆம் தேதி பவுன் ரூ.37,744-க்கு உயா்ந்து, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை மீண்டும் உயா்ந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.42 உயர்ந்து ரூ.4,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.336 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக 38,520க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடும் உயர்வை அடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2.70 உயர்ந்து, ரூ.66.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.