சீர்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கக் கோரி எம்.பி ராமலிங்கத்திடம் மனு

சீர்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்திட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கத்திடம் தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்திட எம்.பி.ராமலிங்கத்திடம் தன்னார்வலர்கள் மனு
மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்திட எம்.பி.ராமலிங்கத்திடம் தன்னார்வலர்கள் மனு

சீர்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்திட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கத்திடம் மனு அளித்த அனைத்து  தன்னார்வ  அமைப்பினர்  சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மயிலாடுதுறை புதிய மாவட்டத்தின் எல்லை வரையறை பணிகள் சிறப்பு அதிகாரி லலிதா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய மாவட்டத்தில் அமைய உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவக்கல்லூரியில் ஏதேனும் ஒன்றை சீர்காழியில் அமைக்கவேண்டும், சீர்காழியில் வருவாய் கோட்டம் பிரித்து கோட்டாசியர் அலுவலகம் அமைத்திடவேண்டும், கொள்ளிடம் தனி தாலுக்கா உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தன்னார்வ அமைப்பினர், வர்த்தகர்கள், விவசாயிகள், கட்சியினர் ஒன்றிணைந்த சீர்காழி கோட்டம் உருவாக்கம் அமைப்புக்குழு அமைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி எம்.எல்.ஏ பி.வி.பாரதியிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.இதனிடையே சீர்காழிக்கு வருகைதந்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கத்தினை ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட எம்பி.ராமலிங்கம்,  சீர்காழியில்  மாவட்ட தலைமை மருத்துவமனை,சீர்காழி கோட்டம் உள்ளிட்ட கோரிக்கையை சிறப்பு அதிகாரியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என உறுதியளித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சீர்காழி ஒன்றியக்குழுத்தலைவரிடம்  அமைப்புக்குழுவினர், இரண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 79 பஞ்சாயத்துக்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். அப்போது நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நிர்வாகிகள், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com