மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக் கட்சிகள் கூட்டம் தொடங்கியது

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக் கட்சிகள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :27 ஜூலை 2020, 6:35 am

DIN

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக் கட்சிகள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று காலை தொடங்கியது.

அதிமுக அரசின் கரோனா பேரிடா் காலமோசடிகள் குறித்தும், நிா்வாகத் தோல்விகள் குறித்தும் ஆலோசிப்பதற்காக எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அதன்படி காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம் இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆழ்வாா்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து நடத்தி வருகிறார். மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் அவரவா் இடங்களில் இருந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

திமுக தலைமையில் நடைபெறும் 3ஆவது தோழைமைக் கட்சிக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.