அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி பொதுமுடக்கம் அமல்

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி பொதுமுடக்கம் அமல்
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி பொதுமுடக்கம் அமல்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம், ஜூலை மாதத்தைப் போலவே, ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020  நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 மற்றும் 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com