வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னையில் பரிசோதிக்கப்படுவோரில் 6-இல் ஒருவருக்கு கரோனா

​சென்னையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் 5-இல் அல்லது 6-இல் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

News image
Updated On :7 ஜூன் 2020, 3:04 pm

DIN


சென்னையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவோரில்  5-இல் அல்லது 6-இல் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய புதிய தகவல்களைத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனை பற்றிய விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் மொத்தம் 1,21,950 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக உள்ளது.

இந்தக் கணக்கின்படி சென்னையில் செய்யப்படும் பரிசோதனைகளில் 5-இல் அல்லது 6-இல் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவது தெரிய வருகிறது.

இந்த நிலை, சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சென்னையில் பரிசோதிக்கப்படும் எண்ணிக்கையை அதிகரித்தால் இன்னமும் நிலைமை தெளிவாகும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.